About Guruji

 மஹரிஷி ஸத்குரு ஸ்ரீ யோகீந்த்ர பாரதி அவர்கள்.....


1971இல் பிறந்தவர். தனது 5ஆவது வயதில், பள்ளிப்படிப்பை துவக்கியதிலிருந்து, தமது கிராமத்து அக்ராஹாரத்தில் 'ஸ்ரீ ஸந்தானம் ஐயர்' அவர்களிடம் பகுதிநேரக் கல்வியை பெற்றுவந்தார். ஸ்ரீ ஸந்தானம் ஐயர் அவர்களிடமே 13வயதிலிருந்து பகவத்கீதை உபதேசம் பெறத் துவங்கி பல ஆன்மீக உபதேசங்களைப் பெற்றார். 

பள்ளிப்பருவத்தில் வள்ளலார் நெறிகளில் நாட்டத்துடன் வாழ்ந்தார். 13ஆவது வயதிலிருந்தே அடிக்கடி சமாதி நிலையில் திளைத்தார். BSc, MSc, கணிதம் படிக்கும் காலங்களில் ஸ்ரீ ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு  21ஆவது வயதிலிருந்து ஆன்மீகத் தேடல் வாழ்வில் நுழைந்தார்.  

30ஆவது வயதில் தமது சமாதி அனுபவங்களைப் பற்றி குருநாதர்களிடம் சொல்லி, அதன் காரணம், பொருள், கடமை,... முதலியவற்றை கற்று, 35ஆவது வயதில் ஆத்மஞானம் அடைந்தார். 

இதற்கிடையில்தான், 33ஆவது வயது வரை பல ஆன்மீக சாதனைகளுடனும், யோக ஆசிரியராகவும், ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி, பௌத்தம், சைவ-ஆகமம்,... போன்ற தத்துவங்கள், நூல்கள் கற்றல்இஸ்கான் வகுப்புகள், கணேஷ்வராசார்யர், சுவாமி சுதீரானந்தர்,... இப்படி பல குருநாதர்களின் உபதேசங்களும், தீக்ஷைகளும், பயிற்சிகளும்,.... என்றும், பலவித சமூக சேவைகளுடனும் வாழ்ந்த பின், 'இறை சாக்ஷாத்காரமே வாழ்வில் தேவை, வேறு எதுவும் இனி தேவை இல்லை' என, ரிஷிகேஷ் சென்றார்.

ஹிமாலயத்தில் ரிஷிகேஷில், ஹரித்வாரில் மற்றும் காசி, அலகாபாத், அயோத்யா, டெல்லி, மதுரா, ப்ருந்தாவன், நாக்பூர், .... பகுதிகளில் மற்றும் தமிழ் நாட்டில் பல பகுதிகளில், சம்பத் பிரம்மச்சாரி - ஞானானந்தர், ஸ்வாமி ப்ரம்ம வித்யானந்தர், ஸ்வாமினி ப்ரம்மபிரகாஷானந்த சரஸ்வதிகள், சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி யசேஷ்வரானந்தர்,... பல குருநாதர்களுடன் தங்கி, வியாஸர், ஆதி சங்கரர், பதஞ்சலி, வால்மிகி... போன்றவர்கள் கற்ற வேத-ஆன்மீக உபதேஷங்களைப் பெற்றவர். 

குரு மகாராஜ் சுவாமி யசேஷ்வரானந்தர் சரஸ்வதிகள்  மகாராஷ்டிரா... 



அவர்களின் ஆதேஷ ஆன்மீக பயணத்தில் இருந்து வருகிறார்.

இன்றுவரை இந்தப் பயணத்தில் பல ஆயிரம் பேருக்கு தீக்ஷை அளித்தவர். பெரும்பாலும் அனைவரையுமே ஆத்மஞானத்தை அடைய வைத்தவர். 

பலரை ரிஷிகளாக்கி, மகரிஷி நிலைக்கு உயர்ந்தவர்.  தற்போது கோவையில் தங்கி 'அரண்குருகுல கட்டமைப்பினை ஏற்படுத்தி, நம் மக்களுக்கு வேத சாஸ்த்திர முறைப்படியான, உடல்-உள்ள-உயிர்-நலக் கல்விகளை வழங்கியும், நாடு முழுவதும் அதனைப் பரப்ப காரியங்களை ஆற்றியும் வருகிறார்.

அவரைப் பொருத்தவரை, நூல் எழுதுதல், பொது சொற்பொழிவுகள்,.... போன்றவற்றில் ஆர்வம் காட்டியதில்லை. ‘கற்றலும் கற்பித்தலும் உயர் சாதனங்கள்’ என்ற வேத உத்தரவுப்படி, நேரடி உபதேசத்தில் மட்டுமே அதிக நேரத்தை, உழைப்பை செலவிட்டு வருபவர்.

பாரத சம்பிரதாயத்தின் ஞானத்தை வழங்கும் பல  சிறந்த படைப்புகளை செய்துள்ளார் என்றாலும், அவற்றில் சில மிகவும் பிரபலம் ஆனவை,
·  லகு பூஜா பத்ததி [பூஜைப் பயிற்சி]
·  றிஷிகளின் கல்வி
· றிஷி வேத விஞ்ஞானம்
·  ஸ்ரீ கிருஷ்ண மார்க்
·  48 மணிநேரத்தில் சம்ஸ்க்ருதம் படியுங்கள் எழுதுங்கள்.  
·  ராஜி: பகவத்கீதை 108 ரத்னமாலை 
DOWNLOAD / பதிவிறக்கு : 
https://rishivedajnaanayogapeetham.blogspot.com/2020/04/raajibhagavadgeetagita108ratnamaalai9.html
·  தமிழில் அனைத்து தெய்வ வழிபாட்டு சுலோகங்கள்
·  தமிழில் தினசரிக் கடன் சுலோகங்கள்
·ஹிந்துக்களின் ஆத்ம ஞானமும் அதற்கு பாரம்ப்ர்யமும்: ஒரு பார்வை [ -பவர் பாய்ண்ட் ப்ரஸன்டேஷன் ] விவரங்களுக்கு...
https://rishivedajnaanayogapeetham.blogspot.com/2020/04/blog-post_96.html
·  போகர் யோகம்: விவரங்களுக்கு...
https://rishivedajnaanayogapeetham.blogspot.com/2020/04/blog-post_20.html

போன்றவை.







அவரது  - ‘மூவுடல் மற்றும் மூவிஞ்ஞான தத்துவங்கள்’. - பற்றிய விளக்கங்கள் உலகப் புகழ் பெற்றவைகள்.


இந்தக் காலத்திற்கு புரியும் விதத்தில் வேதத்தின் பார்வையை விஞ்ஞான மொழியில் காட்டுகிறார். அதைப்பற்றிய சிறிய அறிமுகம் உங்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுக்கும். படிக்க இங்கே சொடுக்கவும்....

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/04/blog-post_2.html


http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/04/blog-post_2.html




அவரது தொடர்புக்கு: 

yogeendra3@gmail.com  


ஃபேஸ் புக் தொடர்புக்கு:

https://www.facebook.com/profile.php?id=100005745107286

அல்லது Search: Yogeendra Bhaarati V P 


அவரது கருத்துக்களை அவர் பதியவைக்கும் ப்ளாக் முகவரி:

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/


பூர்வாஸ்ரமம் அல்லது குழந்தைப்பருவ விவரங்கள்:

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/04/blog-post_16.html