About Us

றிஷி குடில்
அரண் குருகுலம் 

ஹரி ஓம். நமஸ்காரம். 

 
நமது சந்ததிகள் இன்று வெளிநாட்டு வியாபாரிகளின் ஏமாற்று வித்தைகளால் மயக்கப்பட்டு, நமது பெரியவர்கள் காட்டிய வழிகளின் திறமையான பாதுகாப்பினை உணராது, நம்பிக்கை இழந்து, அன்னியரை மதித்து, நம்பி, குடும்பங்களை அழித்துக்கொண்டு, குழம்பிய நிலையில் வாழ்கிறார்கள். அதனால் அவர்களின் சந்ததி இன்னமும், பிறகு அவர்களின் சந்ததி இன்னமும் என்று இந்த குழப்பம் அதிகமாகி வருகிறது.

கலியுகம் இப்படித்தான் இருக்கும் என்றாலும், வைதீகம் வாழ்வை கற்றுணர்ந்த பெற்றுணர்ந்த நாம், நம்முடைய ஸ்வதர்மத்தினை அனுசரித்து, நம் வம்சத்தை காக்க செய்யவேண்டிய கடமைகளை செய்யவே நமக்கு பகவானின் உத்தரவு. 

கடந்த முப்பது ஆண்டுகளாக நமது வைதீகம் வாழ்க்கை உயர்வுக்காக அப்படி வாழ்ந்து, செய்த கார்ய தவங்களின் பலனாக இறைவன் அருளியது ‘வேத ஞான பாடத்திட்டம்’ 

நமக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது இந்த பாடத்திட்டத்தினால் நிச்சயமாக நமது சந்ததிகளையும் மனுஷ்ய வர்கத்தையும் நல்வழிக்கு கொண்டுவர முடியும் என்று. அதற்கு இந்தக் காலத்திற்குத் தேவையான தன்மைகளுடன் திறம்பெற்றதாக இந்தப் பாடத்திட்டம் உள்ளது.  

கடந்த 20 ஆண்டுகளாக இந்தப் பாடத்திட்டத்தை நடத்திப் பார்த்த அனுபவம்; கற்றவர்களின் அனுபவமும்கூட. 

பணத்தில் மயங்கி மிலேச்சரின் பின்னால் செல்லும் நம் குழந்தைகளுக்கு நாம் நிச்சயமாக பணத்தையும் கொடுத்து ஞானத்தையும் கொடுப்பதே கலியுக நியாயம் என்பதே பகவான் நமக்கு உணர்த்துவது. இதில் தர்மத்துடன் செயல்பட்டால் தவறேதும் இல்லை என்பதே நமது அனுபவமாக இருக்கிறது. 

அதனால் இந்த நற்காரியத்தை 100கோடி ரூபாய்களுடன் செய்வதற்கான மிகச் சிறந்த செயல்திட்டம் உள்ளது. 

இதில் மிக அவசரமாக 10கோடி ரூபாய்களுடன் செய்யவேண்டிய குறைந்தபக்ஷ கார்யங்கள் அடங்குகிறது. இந்தக் கார்யங்களின் மூலமாக நிச்சயமாக நமது சந்ததிகளை வைதீகம் மார்கத்திற்கு கொண்டுவர முடியும். அதற்கு தேவையான ஆச்சார்யர்களை உருவாக்குவதே நமது அவசரப்பணி. 

இப்போது வயது ஐம்பது, இதுவரை ஹிந்து ஸந்ததிகளின் நன்மைக்கான வாழ்க்கையிலேயே பயணம் உறுதியாக சென்று வருகிறது. மீதி இருக்கும் நாளில் நன்கு திறம் பெற்ற ஆச்சார்ய குருமார்கள் 1000பேரை உருவாக்கி நாடு முழுவதும், உலகம் முழுவதும் இந்த ஞான விளக்கை எடுத்துச் செல்ல வைக்கவேண்டும் - என்பது நமக்குள் இறை அருள் ஏற்படுத்தி உள்ள ஸங்கல்பம். 

இறை அருளால் செல்வபலம் பெற்றவர்கள் இந்த ஞானத்தை சிறந்த பலத்துடனும், கௌரவத்துடன் எடுத்துச்செல்ல விருப்பப்படவும், முன்வந்து தன தானம் செய்யவும், சிறந்த புண்ணியங்களை சம்பாதித்து, நல்வாழ்வு பெறவும், சந்ததிகளுக்கு நல் உதாஹரனத்தை தரவும் தங்கள் கருணாஹ்ருதயத்திடம் ப்ரார்த்திக்கிறேன்.

மேற்படி, செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு பணித் திட்டத்தை விளக்கவும், பலன் தரும் காரண காரிய சாத்யங்களை விளக்கவுமே தயாராக இருக்கிறோம். 

நன்றி.
ஓம். தத் ஸத்.



---------------------------------------------------------------------------------------------------------------------




எங்களின் பார்வையும்,
பாதையும், பயணமும், அழைப்பும்,....
உங்களுக்காகவும்  காத்திருக்கும் விழிகளுடன்.....


ரிக், யஜூர், ஸாம, அதர்வண - வேதக் கருத்துக்களின் அடிப்படையிலான ஆன்மீகப் பயிற்சிகள் கிடைத்தால் 
மக்கள் தங்கள் வாழ்கையை 
அருள் நெறியிலும் பொருள் நெறியிலும் 
வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் ஆனந்தமாகவும் பூரணமாகவும் 
நடத்த முடியும்,

ஆன்மீகம் என்பது 
குடும்பவாழ்விலிருந்து அப்பாற்பட்டது என்று இல்லாமல், 
குடும்பம் - தொழில் - சூழ்நிலைகளை கையாளும் 
ஆளுமைத்தன்மை - மன அமைதி,... ஆகிய அனைத்து களங்களிலுமே, அவைகளை வெற்றிகரமாக நடத்த உதவும் 
ஆன்மீக அனுகுமுறைகளை வேதம் கொடுக்கிறது.

விதியினாலும் மதியினாலும் வரும் சிரமங்களை 
வெகுவாகக் குறைத்துக்கொண்டும், 
சௌகர்யங்களை அதிகமாக்கிக்கொண்டும் 
நிம்மதியாக நம் விருப்பப்படி வாழ்வதற்கான சாதனங்களும் 
நம் வேதங்களில் சொல்லப்பட்டு உள்ளன.

வாழ்வில் வருகின்ற சூழ்நிலைகள் 
மதி & விதி இரண்டாலுமே வருகின்றன. 
அதனால் அவைகளை கையாளும்போதுகூட - 
நம் முயற்சிகள் & தெய்வ சக்திகள் 
இரண்டின் துனையுடணும் கையாள்வதே சிறப்பு.




நம் சக்தியால் அன்றி, விதியின் சக்தியால் வந்த 
மற்றும் வரும் விஷயங்களை, 
நம் முயற்சிகளால் மட்டுமே கையாள்வது என்பது 
மிகவும் சிரமமே. 
ஏனென்றால், விதிக்கு எந்த விதத்திலும் 
நாம் காரணம் கிடையாது. 

விதி அப்படி இருப்பதற்கான காரணமும் நமக்குத் தெரியாது. 
விதிக்குப் பின்னால் இருந்துகொண்டு 
அதனை வேலை செய்ய வைக்கும் 
தொழில் நுட்ப அமைப்பும் நமக்கு தெரியது.

அதனால் அவைகளைக் கொடுத்தவனின் உதவியுடனேயே 
அவைகளை கையாள்வதே 
புத்திசாலித்தனமான அனுகுமுறை ஆகமுடியும், 
அதற்கு வழிகள் இருக்கின்றன, 
அவைகளை வேதங்கள் விரிவாகவும் விஞ்ஞானபூர்வமாகவும், 
அனைத்து சந்தேகங்களுக்கும் 
பதில்களை  அளித்தும் பேசுகின்றன.

அவைகளில் முக்கியமானவைகளை மக்களிடம் சேர்பிக்க 
இந்த குருகுலம் செயல்பட்டு வருகிறது.

ஆன்மீகத்துறையில் மிகவும் அனுபவம் உள்ளவர்கள் 
ஸ்ரீகுரு யோகீந்த்ர பாரதி அவர்களின் 
 அபரிமிதமான பயனைத் தரும் 
இந்த பாடத்திட்டங்களை 
மக்களுக்கு நடத்தித் தரவேண்டும் என்பதற்காக 
இந்த 'ரிஷி வேத ஞான யோக பீடம்'  
என்ற அமைப்பினை ஏற்படுத்தி 
அதன் மூலம், அவரது வகுப்புகளைத் திட்டமிட்டு 
நடத்தி வருகிறார்கள். 

அவரது இந்த பாடங்கள் வேதங்களின் 
உபாஸனா காண்டத்தின் 
தியான & வழிபாட்டு நுணுக்கங்களை 
மையமாகக் கொண்டவைகள். 
கற்கவும் பயிற்சி செய்யவும் மிகவும் சுலபமாவைகள். 
நம்மிடம் குறைந்த நேரமே கேட்பவைகள் 
அதேசமயம் அதிக பலன்களை தருபவைகள்.

இவற்றின் துணையுடன் அருள் வாழ்க்கை & பொருள் வாழ்க்கை இரண்டிலுமே சுலபமாக உயர்ந்த சாதனைகளை செய்ய முடியும்.


இவைகளை சோதித்துப் பார்க்கவும் ,
இந்த நிச்சயப் பலன்களைப் பெற்று இன்ப வாழ்வை அனுபவிக்கவும் 
உங்களை அன்புடன் அழைக்கிறோம்.


போதகர் குழு

1. ஐஸ்வர்ய மஹரிஷி ஸ்ரீகுரு யோகீந்த்ர பாரதி



நிறுவனர்: ரிஷி வேத ஞான யோக பீடம், ரிஷி வித்யா பீடம், ரிஷிவம்ஷ்

ஆசிரியர்: ரிஷிவித்யா. பாரதீயம், ஸுலப ஸம்ஸ்க்ருதம், பால பூஜா பத்ததி, பால பகவத் கீதா, ..... 









2. ஆச்சார்யர் சுந்தர. பாஸ்கரன்



கோவை ஆணைக்கட்டி ஆர்ஷ வித்யா குருகுலத்தில் பூஜ்ய தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஸ்வாமி ஸாக்ஷாத்க்ருதானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களிடமும்  வேதாந்தக் கல்வி பயின்றவர். ஸ்ரீகுரு யோகீந்த்ர பாரதி அவர்களின் சீடர். 








3. ஆச்சார்யா ரேவதி பாஸ்கரன் 




கோவை சிருவானி சின்மயா மிஷனின் குருகுலத்தில்  

குருஜி தேஜோமயானந்தா ஸரஸ்வதி, ஸ்வாமினி விமலானந்த ஸரஸ்வதி மற்றும் ஸ்வாமி சிவயோகானந்த ஸரஸ்வதி அவர்களிடமும் வேதாந்தக் கல்வி பயின்றவர். 
ஸ்ரீகுரு யோகீந்த்ர பாரதி அவர்களின் சீடர். 



எங்கள் முகவரி:  


Rishi Kudil Aran Gurukulam
Jegaravi Thottam, Puttuvikki, Kovaippudur Road,  
Coimbatore 641010

90 42 800 800
90 42 600600
90 42 500 500